பெண்களுக்கு ஆசை வார்த்தை கூறி | விபச்சாரத்தில் தள்ளிய புரோக்கர் கைது..|
மே, 06-2019…,
சென்னை நொளம்பூர் பகுதியில் பெண்களை ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளிய புரோக்கர் கைது. இரண்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு.
சென்னைக்கு வேலை தேடி வரும் இளம் பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று… அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சொகுசு பங்களாக்களில் தங்க வைத்து… அந்த பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நொளம்பூர் பத்மா தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு போலீசார் சென்று சோதனை செய்தபோது முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(42), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பாலியல்
தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்…
நமது நிருபர்