திருச்சியில் மாநில அளவிலான கோ-கோ போட்டி
மே, 06-2019..,
திருச்சி பப்ளிக் பள்ளி மற்றும் திருச்சி மாவட்ட கோ-கோ கழக அசோசியேஷன் இணைந்து மாநில அளவிலான கோ-கோ போட்டியினை திருச்சி துவாக்குடியில் மூன்று நாட்கள் நடத்தியது. போட்டியானது 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான கோ-கோ போட்டியாகும்.
போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 15 கோகோ அணிகள் பங்கேற்றனர்.
சென்னை அணி முதலிடமும், சிவகங்கை அணி இரண்டாம் இடமும், திருச்சி அணி மூன்றாம் இடமும், ஈரோடு அணியினர் நான்காம் இடமும் பெற்றனர்.
திருச்சி பப்ளிக் பள்ளி நிர்வாகிகள் பாஸ்கர் கீர்த்தி உள்ளிட்டோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்கள்.
தமிழ்நாடு மாநில கோகோ அசோசியேஷன் பொதுச் செயலாளர் அப்பாவு பாண்டியன், திருச்சி மாவட்ட கோகோ அசோசியேஷன் தலைவர் செளமா ராஜரத்தினம் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மூத்த மேலாளர் புண்ணியமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு, வழக்கறிஞர் கிஷோர் குமார், காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருச்சி மாவட்ட கோ-கோ கழக அசோசியேஷன் செயலாளர் கருப்பையா செய்திருந்தார்.
நமது நிருபர்