ஆட்டோ ஓட்டுனரிடம் கத்தியை காட்டி |செல்போன் பறித்த இருவர் கைது | மூன்று பேர் தலைமறைவு. |
மே,6-2019
கோயம்பேடு பகுதியில் ஆட்டோ ஒட்டுனர் இடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த இருவர் கைது மூன்று பேர் தலைமறைவு. இரண்டு செல்போன் இருசக்கர வாகனம் பறிமுதல் சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்/39 ஆட்டோ ஓட்டி வருகிறார் நேற்று அதிகாலை கோயம்பேடு 100 அடி சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தனது செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது அந்த வழியே 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜெயக்குமாரை சுத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதையடுத்து அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த கோயம்பேடு போலீசாரிடம் ஜெயக்குமார் கொடுத்த தகவலையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்றனர் அதில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர் விசாரணையில் பிடிபட்டவர்கள் கொண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த பாபு/22 மற்றும் 16 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது இவர்களிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்த கோயம்பேடு போலீசார் மேலும் தப்பி ஓடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்…
நமது நிருபர்