தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து |
மே, 06 – 2019,
சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்..
அண்ணாநகர் Z பிளாக் பகுதியில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது, அதில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் எரிந்து நாசமாயின மள மளவென பற்றிய தீயானது கொளுந்து விட்டு எரியவே அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜெஜெ நகர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.
இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்