Mon. Oct 7th, 2024

கார்களை குத்தகைக்கு எடுத்து | நூதன முறையில் ஏமாற்றிய காவல் அதிகாரியின் மகன் |

மே,06-2019…,

கார்களை குத்தகைக்கு எடுத்து நூதன முறையில் பல பேரை ஏமாற்றிய ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளரின் மகன் கைது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதவ் ஷர்மா. வயது 30. இவர் ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்துவதாக சொல்லி கோயம்பேட்டை சேர்ந்த துப்புரவு பணியாளர் நாகம்மா (50) என்பவரின் மகனுக்கு வாங்கி தந்த காரை… என்னிடம் வாடகைக்கு தந்தால் மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி.. காரை எடுத்துச் சென்றுள்ளார். அதன்பின் காரும் வர வில்லை, மாத வாடகையும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகம்மா கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஷர்மாவை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் பொழுது… ஷர்மாவின் தந்தை ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர், என்னுடைய மகன் தான் என்று சொல்லி காரையும் பணத்தையும் தந்து விடுகிறேன் என்று சொல்லி மகனை கூட்டிச் சென்றிருக்கிறார்.

அதன் பிறகு… ஷர்மா செல்போன் சுச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக அண்ணா நகரை சேர்ந்த வெற்றி என்பவரிடம் 6 கார்கள் வாங்கி விட்டு தலைமறையாகி விட்டார்.

இது குறித்து வெற்றி கடந்த 20 – 02 – 2019 அன்று அண்ணர நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

புகாரின் அடிப்படையில் சி.எஸ்.ஆர் போட்டு வழக்கு பதிவு செய்து போலீசார் ஷர்மாவை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஷர்மா தன்னுடை மனைவியுடன் சாலி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்ததை அறிந்த வெற்றி… சாலிகிராமம் சென்று பார்க்கும் பொழுது.. ஷர்மா வீட்டை பூட்டி விட்டு செங்கல்பட்டுக்கு சென்று விட்டதாகவும் தகவல் கிடைத்தது.

உடனே வெற்றி அக்கம்பக்கத்தினரிடம், ஷர்மா வீடு காலி செய்ய வந்தால் உடனே எனக்குத் தெரிவிக்கவும் என்று சொல்லி இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மே 4 ஆம் தேதி இரவு… வீடு காலி செய்ய ஷர்மாவும் அவருடைய தந்தையும் வந்து உள்ளனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் வெற்றி என்பவருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெற்றி சர்மாவையும் அவருடைய தந்தையும் சிறைபிடித்தார்.

பயந்து போன ஷர்மாவின் தந்தை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க… சம்பவ இடத்துக்கு வந்த விருகம்பாக்கம் போலீசார் ஷர்மாவை கைது செய்து விசாரணை செய்து கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இதுகுறித்து கோயம்பேடு போலீசார் ஷர்மாவை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கார் வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் நூதன முறையில் பேசி மாதா மாதம் வாடகை தருவதாக கூறி… கார்களை வாடகைக்கு எடுத்து சென்று.. வாடகையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததுமட்டும் அல்லாமல் காரை திருப்பி கேட்ட போது காரையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கார்களை கொடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் திரண்டு இருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஷர்மா மீது கோயம்பேடு, விருகம்பாக்கம்,
வடபழனி, ராயப்பேட்டை, அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது…

நமது நிருபர்