Sat. Dec 21st, 2024

44 கைபேசிகளை | உரியவர்களிடம் ஒப்படைத்த மயிலாப்பூர் காவல்துறை |

காணாமல் போன கைபேசிகளை மயிலாப்பூர் சைபர் கிரைம் துணையுடன் கண்டுபிடிப்பு

சென்னை மயிலாப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் காணாமல் போன கைபேசிகளின் புகார் மனுக்கள் காவல் நிலையங்களில் முறையாக பெறப்பட்டு சமுதாய பணிபதிவேட்டில் பதிவு செய்து காணாமல் போன கைபேசியின் IMEI எண்களை கொண்டு மயிலாப்பூர் மாவட்ட சைபர் கிரைம் உதவியுடன் தற்போது பயன்படுத்தகூடிய நபர்களின் விவரங்களை சேகரித்து தனிப்படை அமைத்து காணாமல் போன கைபேசிகளை கண்டுபிடித்து இன்று பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் வரவழைத்து துணை ஆணையர் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நேரடியாக ஒப்படைக்கப்பட்டது.

மயிலாப்பூர், மெரினா, பட்டினப்பாக்கம், கோட்டூர்புரம், அபிராமபுரம், ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் போன்ற இடங்களில் இருந்து ஆக மொத்தம் 44 கைபேசிகளை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது…

நிருபர் ராம்