நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் | வாலிபரை விரட்டிய ரவுடிகள் |
பட்டாகத்தியுடன் நடுரோட்டில் வாலிபரை ரவுடிகள் விரட்டியதால், சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஒட்டம்.!
சென்னை பாடி சக்தி நகரை சேர்ந்தவர் பிரவீன் (23). இவர் அண்ணாநகரில் உள்ள வி.ஆர் மாலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று நள்ளிரவு 12.30மணி அளவில் இரவு பணி முடித்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் பொழுது வி.ஆர்.மால் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் மோதுவது போல வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.. தகராறில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் எதிரே வந்தவர் தொலைப்பேசியில் தனது நண்பர்களை அழைத்ததால் சம்பவ இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மறைத்து வைத்து இருந்த பட்டாகத்தியை எடுத்ததை கண்டதும்… பயத்தில் பிரவீன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓட ஆரம்பித்துள்ளார்.
கையில் பட்டாகத்தியுடன் மூன்று மர்ம நபர்கள் பிரவீனை நடுரோட்டில் துரத்தியுள்ளனர். சிறிது தூரம் சென்றவுடன் அங்கே வந்த மாநகர பேருந்தில் ஏறி தப்பியுள்ளார் பிரவீன். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மூவரும் பிரவீனின் இருசக்கர வாகனத்தை கற்களால் அடித்தனர். பயந்து போன பிரிவீன் காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மர்ம நபர்களை துரத்தி சென்றனர். மர்ம நபர்கள் மூவரும் தப்பியோடியுள்ளனர். இது குறித்து பிரவீன் அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்