Sun. Oct 6th, 2024

கிடப்பில் கிடக்கும் கால்வாய் பணி |உயிரை பணையம் வைத்து மக்கள் பயணம் |

மே, 04-2019…,

சென்னை வில்லிவாக்கத்தில்… பாதி கட்டியும் கட்டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் பணி காரணமாக அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் மழைநீர் கால்வாயை விரைவில் முடித்துத்தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

சென்னையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஆகும்…

இதனால் அப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு வழங்கும் நிதியிலிருந்து நகராட்சி நிர்வாகம் மேம்பாட்டுப் பணிகளை செய்து வருகிறது. 

இந்நிலையில் வில்லிவாக்கம் அன்னை சத்தியாநகர் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக மழைநீர் கால்வாய் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள பணிகளுக்காக கான்கிரீட் மேல்தளம் அமைத்து அதன்மீது இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கம்பிகளில் கான்கீரிட் கலவை போட்டு வெளியில் ஆபத்தான நிலையில் இருக்கும் கம்பிகளை மூடி நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால், கடந்த 5 மாதங்க மேலாக இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 
இதனால், அந்தத் தெருவில் பள்ளிக் குழந்தைகள், வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமக்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் தெருவில் நடந்து செல்லும்போது அவ்வப்போது தடுக்கி இரும்பு கம்பியின் மீதும், அருகிலும் விழும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே மழைநீர்க்கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அம்பேத்கர் மற்றும் குட்டிவளவன் உள்ளிட்டோர் கூறியதாவது கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மழைநீர்க் கால்வாய் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதில், இரும்பு கான்கிரிட் கம்பிகள் ஆபத்தான முறையில் வெளியில் நீட்டிக்கொண்டுள்ளன.

மேலும் மேம்பாலத்தின் கீழ் உள்ளதால் மேம்பாலத்தின் சுற்றிவருபவர்கள் இந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளும் அதிக அளவில் உள்ளதால் அலுவலக, பள்ளி நேரங்களில் இத்தெரு வழியே பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள கால்வாய்ப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்கள்…

நமது நிருபர்