Sat. Dec 21st, 2024

ATM- இயந்திரத்தை உடைக்க முயன்ற மூவர் | ஐந்து மணி நேரத்தில் கைது |

ATM இயந்திரத்தை உடைக்க முயன்ற மூவர் | ஐந்து மணி நேரத்தில் கைது |

கோவை பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள கவுண்டம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM மையத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயற்சிப்பதாக காவல்துறையினருக்குதகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அங்கு கிடைத்த சிசிடிவி வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ததில் அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் இதில் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்ததும் மூன்று இளைஞர்களில் ஒருவர் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார் எனவும் மேலும் இருவர் ATM வெளியே நின்று ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என நோட்டமிடுவது போல் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது.

ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து குற்றவாளிகளை ஐந்து மணி நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரித்ததில் வீடியோ பதிவுகளுடன் முக ஜாடை ஒத்து போனதாலும் அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர் இவர்கள் அண்ணா நகர் பகுதி கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பாலாஜி/25, புவனேஷ்வரன்/24, மற்றும் ரங்கராஜ்/31 ஆகிய மூவர் தான் அந்த வங்கி ஏடிஎம் மையத்தை உடைக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்…

நிருபர் ராம்