Sat. Dec 21st, 2024

பேருந்து நிலையத்தில் துப்பாக்கியை | வைத்து சென்றவரிடம் விசாரணை |

சென்னை கோயம்பேடு அரசு விரைவு பேருந்தில் வந்த நபரிடம் கை துப்பாக்கி ஒன்று பிடிபட்டது அதை போக்குவரத்து துறை அதிகாரிகள் கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்…

இன்று காலை 3:30 மணியளவில் ஒசூரில் இருந்து சென்னை வந்த அரசு விரைவு பேருந்தில் அண்ணா நகரை சார்ந்த வாசு/30 என்பவர் அவருடைய கைபையை பேருந்தில் விட்டு சென்றார்.

பேருந்தில் அவரது பையை பார்த்த நடத்துனர் போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் பையை ஆராய்ந்து பார்த்ததில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனே பேக் குள்ள இருந்த போன் நம்பரை எடுத்து தொலைபேசி மூலமாக வாசுவை வர வைத்தார் பின்பு வாசுவை பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் குறித்து ஆய்வாளர் ராஜ்குமார் விசாரணை நடத்தியதில் வாசு வைத்திருந்தது டம்மி துப்பாக்கி என தெரிய வந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே சென்னை ஜெஜெ.நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு இருப்பதால் தீவிர விசாரணை நடத்திய பின்பு ஒரு வழக்கு பதிவு செய்து பின்னர் வாசுவை விடுவித்தனர்.

கோயம்பேடு விரைவு பேருந்தில் கை துப்பாக்கியுடன் வந்ததால் அப்பகுதியில் சற்று நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது…

நமது நிருபர்