Sat. Dec 21st, 2024

கேஸ் சிலிண்டர் கசிவால் வீடு தீப்பற்றி எரிந்து அரசு அதிகாரி படுகாயம்..!

முகபேர் பகுதியில் கேஸ் சிலிண்டர் கசிவால் வீடு தீப்பற்றி எரிந்து அரசு அதிகாரி படுகாயம்.

சென்னை, முகப்பேரு கிழக்கு நக்கீரன் 25வது தெரு சேர்ந்த ஸ்ரீதர் வயது 25 இவர் அரசு அதிகாரியாக பணிபுரிகிறார். இவருடைய மனைவி ஒரே மகன் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக வசித்து வந்த ஸ்ரீதர் இன்று காலை கேஸ் அடுப்பை பத்த வைத்த பொழுது.. சிலிண்டரில் உள்ள கேஸ் கசிந்து கொண்டு இருந்தத… திடீரென்று வீடு தீப்பற்றியது. அதில் ஸ்ரீதரின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

ஸ்ரீதர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வந்து அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய வார்டில் ஆபத்தான நிலையில் ஸ்ரீதர் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் வீட்டில் உள்ள டிவி மற்றும் குளிர் பெட்டி பொன்ற பொருட்கள் நாசம். இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜெஜெ.நகர் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்