இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் | கீழே விழுந்து, சிகிச்சை பலனின்றி மரணம் |
ஐசிஎப் சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை வில்லிவாக்கம் வடக்கு திருமலை நகர் சேர்ந்த சஞ்ஜினி/70 இவர் கடந்த 22ம் தேதி அன்று தன்னுடைய மகன் ராஜேஷ் /45 என்பவர் கூட இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஐசிஎப் சிக்னல் அருகே வரும் போது இரு சக்கர வாகனத்தில் இருந்து சஞ்ஜிவி தீடீர் என்று மயங்கி கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது உடனே அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சஞ்ஜினி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போக்குவரத்து போலீசார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்…
நமது நிருபர்