முகப்பேரில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் தீ விபத்து.
சென்னை, முகப்பேர் நொளம்பூர் சாலையில் உள்ள தமிழக IG மகேந்திரன் IPS அவர்களின் வீடு அமைந்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 28) இரவு 10.30 மணி அளவில் இவரது வீட்டின் வளாகத்தில் உள்ள தென்னை மரம் காய்ந்த நிலையில் இருந்ததால்… அந்த தென்னை மரத்தின் கீற்று அருகில் சென்ற மின்சார ஒயரில் உரசி தீ ஏற்பட்டுள்ளது.
மரம் நன்றாக காய்ந்து இருந்ததால் மளமளவென மரம் தீ பற்றி எரிந்தது. இது குறித்து தீயணைப்பு போலீசார்க்கும் நௌம்பூர் காவல்நிலையத்திற்கும் புகார் அளிக்கப்பட்டு ஜெஜெ நகரில் தீயணைப்பு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் மின் இணைப்பு துண்டிக்கப்படாததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கமுடியவில்லை, பின்னர் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, மின் இணைப்பை துண்டிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் தீயணைக்கப்பட்டது.
இன்னும் வேகமாக தீ பரவியிருந்தால் ஐ.பிஎ.ஸ் மகேந்திரன் அவரது வீட்டினுள் தீ பரவி பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது…
நமது நிருபர்