Sat. Dec 21st, 2024

மீன் வியாபாரி மர்ம மரணம் | திருநங்கை தலைமறைவு |

மீன் வியாபாரி மர்ம மரணம் | திருநங்கை தலைமறைவு |

வாலஜாபாத் பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார்/25 இவர் சிந்தாரிப்பேட்டை பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் இவர் திருவல்லிக்கேணி பல்லவன் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து வேலை செய்து வருகிறார் அவருடன் வாலாஜபாத் பகுதியை சேர்ந்த ரதி என்ற திருநங்கையும் ஓரே வீட்டில் 3 மாதங்களாக வசித்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று அஜீத்குமார் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து பட்ட நிலையில் கோஷா மருத்துவமனைக்கு சென்று தன்னை தானே குத்திக் கொண்டதாக கூறி சிகிச்சை அளிக்குமாறு கூறியுள்ளார் இந்நிலையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் பின்பு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் விடியற்காலை 4.45.மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவருடைய பெற்றோர் தன் மகனுடன் தங்கியிருந்த திருநங்கை ரதிதான் தன்னுடைய மகனை கத்தியால் குத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர் பின்னர் திருநங்கை ரதி தலைமறைவாகி உள்ளது தெரிய வந்துள்ளது இதனை தொடர்ந்து போலிசார் திருநங்கை ரதியின் தந்தை நெடுஞ்சேரலாதன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்…

நமது நிருபர்