Sun. Oct 6th, 2024

பிரபல ரவுடி கொலை வழக்கில் | மேலும் இருவர் கைது |

அரும்பாக்கத்தில் ரவுடி குமரேசன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது ஒருவர் தலைமறைவு இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரிக்கு அருகே கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி அன்று கொலை வழக்கு தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு சென்று விட்டு ஆட்டோவில் அரும்பாக்கம் தனியார் கல்லூரி அருகே வரும் போது பிரபல ரவுடி குமரேசனை வழிமறித்து இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் பட்டபகலில் பலர் முன்னிலையில் வெட்டி கொலை செய்தனர்.

தாக்கப்பட்ட ரவுடி குமரேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்தது ரவுடி சகாயம் மற்றும் அவரது கூட்டாளிகள் என தெரியவந்தது. அவர்களை பிடிக்க அண்ணா நகர் துணை ஆனையர் சுதாகரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் குணசேகரன், தலைமையிலான போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு பதுங்கி இருந்த செனாய் நகரை சேர்ந்த சகாயராஜ் (என்ற) தேவராஜ்/33, காது ஸ்ரீதர்/25, சூளைமேட்டை சேர்ந்த கார்த்திக்(என்ற)டோரி கார்த்திக்/34, கானாகுரு(என்ற) மினேஷ்குமார்/29,
ஆடு ஸ்ரீதரை ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்…

மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சுந்தர்,விஜய்,பாம்பு வினோத்,மாவா வெங்கடேசன் ஆகிய நான்கு பேர் தலைமறைவாக இருந்தனர்.அவர்களை போலீசார் தேடிவந்த நிலையில் வடபழனி அருகே நின்றிருந்த சூளைமேட்டை சேர்ந்த ரவுடி விஜயன் (எ) விஜயக்குமாரை/19 கைது செய்தனர் கைது செய்யப்பட்ட ரவுடி விஜயக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேரில் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர் மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை காவல்துறையினர் தேடிவந்தனர். நிலையில் நேற்று இரவு அமைந்தகரை அருகில் இருசக்கர வாகனத்தில் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து உதவி ஆணையர் குணசேகர் தலைமையில் ஆய்வாளர் சங்கர் , ஆய்வாளர் முத்துகுமார், உதவி ஆய்வாளர் பச்சைமுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் ரவுடி குமேரசன் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள்.புதுப்பேட்டை சேர்ந்த வினோத்குமார் (எ)பாம்பு வினோத்/ 29 இவர் மீது சேத்துப்பட்டு காவல் நிலைத்தில் கொலை வழக்கு மற்றும் சூளைமேடு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது மாதவரம் சேர்ந்த பாக்கியராஜ்/39 இவர் மீது கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் திருவிக.நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது என்பதும் மேலும் ரவுடி குமரேசன் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி வெங்கடேசன் தலைமறைவாகி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது…

நமது நிருபர்