Sat. Dec 21st, 2024

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை | சூடான் நாட்டு இளைஞர்கள் படம் எடுத்தார்களா |

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கு இயந்திரங்கள் உள்ள கட்டிடத்தை சூடான் நாட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் செல்போனில் படம் எடுத்தனர் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்து அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சூடான் நாட்டை சேர்ந்த காரி முகமது, அப்துல் ரகுமான் என்பது தெரிய வந்தது போலீசார் விசாரணையில் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பின்பாக உள்ள சிஐஏ என்ற கல்வி நிறுவனத்தில் படிப்பதற்காக விண்ணப்பம் பெற வந்த மாணவர்கள் என தெரியவந்தது மாணவர்கள் புகைப்படம் எடுத்ததை அடுத்து சம்பந்தப்பட்ட துறை பேராசிரியர் முருகன் என்பவரை வரவைத்து மாணவர்கள் குறித்த தகவல் உறுதி செய்து பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களை கேமராவிலிருந்து நீக்கிய பிறகு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் இருவரும் குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி பொறியியல் கல்லூரியில் படித்து வருவது தெரிந்தது இதையடுத்து இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததாக தகவல்.

நமது நிருபர்