Sat. Dec 21st, 2024

MLA, அதிமுக ஒன்றிய செயலாளர், ஆய்வாளர் மூவர் மீதும் | SP யிடம் புகார் அளித்த 80 வயது மூதாட்டி |

ஈரோடு எஸ்பியிடம் ஏப்ரல் 22ஆம் தேதி தங்கம்மாள்(வயது 80) என்ற மூதாட்டி ஒருவர், பெருந்துறை எம்எல்ஏ மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயன் (எ) ராமசாமி ஆகியோர் தூண்டுதல் பேரில் பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் தனது வீட்டை விட்டு தன்னை வெளியேற்றி விட்டதாக புகார் ஒன்றை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் புகார் கொடுத்த கையோடு எஸ்பி அலுவலகத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க புகார் ஒருவிதமாகவும் பேட்டி ஒருவிதமாகவும் இருந்ததால் நாம் சந்தேகத்துடன் ஒரு எம்எல்ஏ மீது கொடுக்கப்பட்ட புகார் என்பதால் நமது விசாரணையை துவக்கினோம்.

தங்கம்மாளின் ஊரான கோபி கவுண்டன்பாளையம் கிராமத்திலிருந்து நம் விசாரிக்கையில் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பக்கத்தில் உள்ளது கோபி கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியண்ண கவுண்டர், பாப்பாத்தி (எ) தங்கம்மாள் தம்பதிக்கு அருகே உள்ள பொன்முடி கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் அளவிற்கு விவசாய பூமி உள்ளது. இவர்களுக்கு மணி(எ)விஜயபுரி என்கிற மகனும், வசந்தாமணி, ருக்குமணி, தனலட்சுமி என்கின்ற மூன்று மகள்களும் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் சொத்து பிரச்சனை கடந்த 9 வருடங்களாக இருந்து வருகிறதாகவும் இதில் பெண்கள் தரப்பும் மகன் தரப்பும் அடிக்கடி மோதி கொண்டே இருக்கின்றதாகவும் கூறப்படுகின்றது இந்நிலையில் இந்த சொத்து சம்பந்தமான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.. இந்த சூழ்நிலையில் வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெரியண்ணகவுண்டர் மரணமடைய அவர் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய்களை, மகள்கள் தனக்கு தெரியாமல் அபகரித்து கொண்டதாக விஜயபுரி குற்றஞ்சாட்டி இருக்கிறார் இதனால் தந்தையின் இறுதி சடங்கில் கூட அவர் பங்கேற்கவில்லை. மேலும் இவ்வழக்கை யொட்டி மகன் விஜயபுரி தரப்பு நீதிமன்றத்தில் தன் சகோதரிகள் சம்பந்தப்பட்ட சொத்திற்குள் நுழைய தடைகேட்டு நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தோட்டத்தில் தனியாகக் குடியிருக்கும் விஜயபுரியிடம் சகோதரிகள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதால் ஊரில் உள்ள பெரியவர்கள் விஜயபுரிக்கு ஆதரவாக பேசியுள்ளனர் மேலும், கடந்த 6/12/18 அன்று விஜயபுரியிடம் தகராறு செய்யும் எண்ணத்துடன் சகோதரி ருக்குமணி, அவர் கணவர் சண்முகம் அவர்களது மகன்கள் மகேஷ், சசிக்குமார் ஆகியோர் வந்துள்ளனர். அன்றைய தினம் இரவு அதே ஊரில் வசிக்கும் சுரேஷ் என்பவரது வீட்டிற்கு முன்புறம் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கின்றனர். அப்போது வீட்டினுள் இருந்த சுரேஷ் வெளியில் வந்து, சண்முகம் மற்றும் அவரது மகன்களை கண்டித்திருக்கிறார். இதனால் சுரேசுக்கும் ரூக்குமணி தரப்பிற்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு உருவாகியுள்ளது. இதில் மண்வெட்டியின் இரும்பு கடப்பாறை ஆகியவற்றால் சுரேஷை, தலை உள்பட பல இடங்களில், ருக்குமணி தரப்பு பலமாகத் தாக்கியுள்ளதாக தகவல் பலத்த காயமடைந்த சுரேசை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பெருந்துறை அரசு மருத்துவமனையில் 6/12/18 அன்று சுரேஷ் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு, பிறகு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பெருந்துறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. (Cr No: 723/18) வெள்ளாங்கோவில் என்னும் ஊரை சேர்ந்த சண்முகம் ருக்மணி தம்பதியினர்,தங்கள் ஊருக்குள் வந்து சுரேசை தாக்கியது தொடர்பாக பெருந்துறை ஆய்வாளர் சுகவனத்திடம் முறையிட ஆய்வாளரும் விசாரித்து சம்பத்தின் உண்மைகளை அறிந்து தனது காவல் நிலைய எல்லைக்குள் அத்துமீறி அடிதடியில் ஈடுபட்ட சண்முகம் ருக்மணி தம்பதியை கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் இத்தம்பதிகள் அவர்களது மகன்கள் மீது கோபி, சிறுவலூர் காவல் நிலையங்களில் அடிதடி உள்பட பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இவ்வூருக்குள் நுழைந்து எவ்வித பிரச்சினையும் செய்யக்கூடாது என்று ஆய்வாளர் எச்சரித்ததிற்கு காரணம், தங்களால் தாக்கப்பட்ட சுரேஷ் அதிமுகவை சேர்ந்தவர். அவருக்கு எம்எல்ஏவுடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகமே தவிர வேறு உறுதியான ஆதாரங்கள் ஏதுமில்லை.

இந்த வழக்குகள் சம்பந்தமான விசயங்கள் இப்படியிருக்க இந்த சொத்து சம்பந்தமான பிரச்சனையை திசை திருப்பும் நோக்கில் தங்கம்மாளின் மகள் ருக்குமணி மற்றும் அவரது கணவர் சண்முகம் ஆகியோர் தூண்டுதலின் பேரில் தங்கம்மாள் புகார் கொடுத்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்தனர் மேலும் இந்த அடிதடி சம்பவம் நடப்பதிற்கு இரண்டுமாதம் முன்பே தங்கம்மாள் தானே தனது மகள் ருக்குமணி வீட்டிற்கு சென்று விட்டதாகவும் அவரை வேறு யாரோ மிரட்டி வெளியேற்றவில்லை என்றும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்..

நிருபர் சண்முகசுந்தரம்