Mon. Dec 30th, 2024

போதை மாத்திரை கடத்தல்| ஒருவர் கைது |மாபியா கும்பலுடன் தொடர்பா.?|

சென்னை முகப்பேரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது 3.75 இலட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் டால்பின் நீச்சல் குளம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து போதை தடுப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுப்பட்டனர் அப்பொழுது மஞ்சள் நிற டியோ இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து சோதனை செய்த பொழுது அவரிடம் எல்எஸ்டி போதை ஸ்டாம்ப் மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சரத் (எ) சரவணன்/23 என்பது தெரியவந்தது.

மேலும் இவர் போதை மாத்திரைகள் சப்ளை செய்கிறாரா இவருக்கு பின்னால் இருக்கும் கும்பல் யார் என்று தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்