Sat. Dec 21st, 2024

பாழடைந்த கட்டிடத்தில் வெடிபொருட்கள் வெடித்து | சிறுமி படுகாயம் என தகவல் |

சென்னை பெரம்பூரில் பாழடைந்த கட்டிடத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் சிறுமி படுகாயம். தனியார் மருத்துவமனையில் அனுமதி. 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்.

சென்னை பெரம்பூரை சேர்ந்த காயத்திரி வயது 11. நேற்று மாலை பெரம்பூரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே காயத்திரி நடந்து செல்லும் போது தீடீர் என்று பாழடைந்த கட்டிடத்தில் இருந்து வெடிபொருட்கள் வெடித்ததில் அவள் படுகாயம் அடைந்தார். இதனை அறிந்து அருகிலிருந்த அக்கம்பக்கத்தினர் காயத்திரியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அதன்பின் தகவல் அறிந்த ஐ.சி.எப் போலீசார் பாழடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்த போது.. 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டு வெடி குண்டுகளை பதுக்கிய நபர்கள் யார்..? என ஐ.சி.எப் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்