நீயூஸ் 18 செய்தியாளர் கலைவாணன் மீது தாக்குதல் | சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் |
அரியலூர், பொன்பரப்பியில் நீயூஸ் 18- தொலைக்காட்சி
செய்தியாளர் கலைவாணன் மீது தாக்குதல் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்
தமிழகத்தில் செய்தியாளர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் – பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களே இன்று (18-04-2019) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மோதல் ஏற்பட்டது…
இந்த மோதல் சம்பவத்தை செய்தி சேகரித்த நீயூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணன் மீது சமுக விரோத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் அங்கு செய்தி சேகரித்து கொண்டிருந்த மற்ற செய்தியாளர்களையும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இந்த தாக்குதல் மற்றும் மிரட்டல் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.சமுக விரோத கும்பலால் தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர் கலைவாணன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சமீபகாலமாக செய்தியாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களில் விருதுநகரில், மதுரையில் என பல பகுதிகளில் அரசியல் கட்சியினர், காவல்துறையினர் என பலதரப்பினரும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தகைய போக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. தமிழக அரசு உரிய காலத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்காததே இதற்கான காரணம் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் ஒன்று உருவாக வேண்டிய கட்டாயத்தை இந்த சம்பவங்கள் உறுதி செய்கிறது.பத்திரிகையாளர் கலைவாணனை தாக்கிய சமுக விரோத கும்பலை கைது செய்ய தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது .
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்.