Sat. Dec 21st, 2024

மனைவியின் தலையை வெட்டி பைக்கில் | ஊர்வலமாக எடுத்து வந்த கணவர் கைது |

மனைவியின் தலையை வெட்டி பைக்கில் | ஊர்வலமாக எடுத்து வந்த கணவர் கைது |

கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியின் தலையை அறுத்து உடலை பைக்கில் உட்கார வைத்து ஊர்வலமாக சென்ற கணவனை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருபவர் முனியப்பன்/28 இவர் கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரை சார்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் இதே ஊரை சேர்ந்த சேகர் என்பவரின் மகள் நிவேதா/19 என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் இவருக்கு திருமணம் ஆகி ஏழு மாதங்கள் ஆகிறது…

திருமணம் முடிந்து ஈரோடு திண்டல் அருகே உள்ள வேப்பம்பாளையத்தில்குடியிருந்து வருகின்றனர் முனியப்பன் கேஸ் லாரிகளுக்கு சிலிண்டர் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி நிவேதா தனியார் டிப்பாட்மன்ட் ஷோரூமில் வேலை செய்து வந்தார். நிவேதாவிற்கு செல்போனில் அடிக்கடி நீண்ட நேரம் பேசும் பழக்கம் இருந்து வந்துள்ளது இதனால் முனியப்பனுக்கு தன் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தம்பதிகள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று இரவு முனியப்பன் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு இரவு பத்து மணிக்கே வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் நிவேதா வேறொரு வாலிபரோடு உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து நிவேதாவிற்கும், முனியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முனியப்பன் நிவேதாவை உன்னை எங்கிருந்து அழைத்து வந்தேனோ அங்கேயே விட்டு விடுகிறேன் வா என கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். பெருந்துறையிலிருந்து பவானி செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் எருக்காட்டு வலசு அருகே கண்ணவேலம் பாளையம் பகுதியில் வந்த போது மேலும் இருவருக்கும் வாக்குவாதம் வலுத்தது அப்போது வண்டியை நிறுத்திய முனியப்பன் வீட்டில் இருந்து கொண்டு வந்த காய்கறி வெட்டும் கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்துள்ளார் அப்போது இருவருக்கும் நடந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டு கத்தி முனியப்பன் காது மற்றும் கன்னத்தை அறுத்தது அதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் நிவேதாவை கீழே தள்ளி காலால் மிதித்து குரல்வலையை அறுத்துள்ளார் பின்னர் தலையை தனியே எடுத்து ஒரு பையில் போட்டுக்கொண்டு உடலை எடுத்து பைக் பெட்ரோல் டேங்கின் மீது தன் பக்கமாக திருப்பி உட்கார வைத்து பைக்கில் ஊர்வலமாக வந்துள்ளார் அப்போது வேகமாக வந்து பைக்கை திருப்பியபோது அப்பகுதியில் உள்ள வீட்டு சுவரின் மீது மோதி விழுந்துள்ளார் அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் யாரோ அடிபட்டு விட்டார்கள் என்று காப்பாற்ற ஓடிவந்துள்ளனர் இதை கண்ட முனியப்பன் தப்பித்து ஓடியிருக்கிறார் அதைப் பார்த்த பொதுமக்கள் முனியப்பனை துரத்தி பிடித்து கிராம நிர்வாக அலுவலர் ஆல்பர்டிடம் ஒப்படைத்துள்ளனர் அவர் உடனடியாக பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனத்திடம் முனியப்பனை ஒப்படைத்தார் ஆய்வாளர் சுகவனம் முனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மேலும் நிவேதா உடல் ஈரோடு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது மனைவியின் தலையை அறுத்து முன்டத்தோடு பைக்கில் ஊர்வலமாக கணவன் வந்தது பெருந்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

நிருபர் சண்முகசுந்தரம்