Sun. Oct 6th, 2024

சென்னையில் கடத்திய பள்ளி மாணவியை | திரிபுராவில் போராடி மீட்டு வந்த உதவி ஆய்வாளர் |

சென்னை, பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் திரிபுரா சென்று கடத்திய வாலிபரை கைது செய்த அமைந்தகரை போலீசார்.

திருப்பூரா மாநிலத்தில் பள்ளி மாணவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு. அமைந்தகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் மகள் காயத்திரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எட்டாம் வகுப்பு படிக்கும் காயத்திரி கடந்த மாதம் 15ம் தேதி அன்று கடைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என்று மாணவியின் தந்தை அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வடமாநிலத்தை சேர்ந்த ஜாகிர் என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார் புகாரை விசாரித்த ஆய்வாளர் பெருந்துறை முருகன் தனிப்படை அமைத்து உதவி ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் அமைந்தகரை காவலர்கள் முதற்கட்டமாக பெங்களூர் சென்று தேடியதில் அந்த பெண்ணை வடமாநிலமான திரிபுராவிற்கு அழைத்து சென்று விட்டதாக தகவலறிந்து, மீண்டும் சென்னை வந்து வடமாநிலம் செல்ல அனுமதி பெற்றுக் கொண்டு உதவி ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், பெண் தலைமை காவலர் ஆனந்தி ஆகிய மூவர் குழு… திரிபுராவிற்கு புறப்பட்டு சென்று ஜட்ராபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாணவியை பத்திரமாக மீட்டனர்.

அப்பொழுது போலீசாரை பார்த்த வாலிபர் தப்பி ஓடிய போது, திரிபுரா காவல்துறையினர் உதவியுடன் சிவசங்கரன் விரட்டி சென்று அந்த வாலிபரை கைது செய்தார். குற்றவாளி ஜாகிர் என்பவரை திரிபுரா மாநில, ஜட்ராபூர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு..

பின் பள்ளி மாணவியை பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த அமைந்தகரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசங்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் பெண் காவலர் ஆனந்தி ஆகியோருக்கு உயரதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்…

காவல்துறை மீது பொதுமக்களுக்கு உள்ள தவறான கருத்துக்களுக்கு மத்தியில் காவல்துறை மீது சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, ஆங்காங்கே சில அதிகாரிகள் நல்லவைகளை விதைத்து கொண்டும் உள்ளனர்..

நமது நிருபர்