Sat. Dec 21st, 2024

மனைவி திட்டியதால் ரவுடி தற்கொலை முயற்சி…!!!

மனைவி திட்டியதால் மனமுடைந்த ரவுடி தூக்குமாட்டி தற்கொலை முயற்சி.

சென்னை ஐ.சி.எப் பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (33). ஐ.சி.எப் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், எலக்ட்ரிஷியனாக பணிப்புரிந்து வருகிறார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு லதா என்ற பெண்ணுடன் திருமணமாகியது. இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பருடன் மது அருந்தி விட்டு இரவு தாமதமாக வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுபோதையில் இருந்த மனமுடைந்து ரஞ்சித், தனது மனைவி பாத்ரூம் சென்றவுடன் மனைவியின் துப்பட்டாவால் தூக்கு மாட்டி கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லதா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மனைவி திட்டியதால் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்ள முயன்ற ரவுடி ரஞ்சித் ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்…

நமது நிருபர்