100 சவரன் நகை | 3 கிலோ வெள்ளி | 2 லட்சம் பணம் கொள்ளை|
100 சவரன் நகை | 3 கிலோ வெள்ளி | 2 லட்சம் பணம் கொள்ளை |
சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகர் விபி.சித்தர் தெருவில் வசிக்கும் அல்லி தாமரை/53 என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, 2 லட்சம் பணம் மற்றும் மூன்று கிலோ வெள்ளி கொள்ளை…
அல்லி தாமரை என்பவர் வேலூர் மாவட்டத்தில் சிறப்பு துணை மாவட்ட ஆட்சியராக பணிபுரிகிறார் இவர் கடந்த 2ம் தேதி தேர்தல் பணிக்காக அரக்கோணம் திருப்போரூர் சென்று இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைந்த நிலையில் இருந்துள்ளது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வேலை ஆட்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை. மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கை ரேகை நிபுணர்கள் வந்து ரேகைகள் பதிவு செய்யப்பட்டது பழைய குற்றவாளி யாரேனும் இதில் தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை சோதனை செய்து வருகின்றனர்…
நமது நிருபர்