உரிய ஆவணங்கள் இல்லாத ரூபாய் 2 கோடியே 75 லட்சம் பறிமுதல் |
சென்னை, நொளம்பூர்
பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 75 லட்சம் ரூபாய் பறிமுதல்.
மக்களவை தேர்தலை ஒட்டிப் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய அனுமதியின்றியும், ஆவணங்கள் இன்றியும் செல்லப்படும் பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை முகபேர் மேற்கு பேருந்து நிலையம் அருகே மார்ச் 8 ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செந்தில்குமார், ராஜாராம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 75 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தில் இருந்த நொளம்பூர் பகுதியை சேர்ந்த மாதவன் (27) என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது தனியார் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப எடுத்து சென்றது தெரியவந்தது.
உரிய ஆவனங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் சென்னை வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் வட்டாச்சியர் பாரதிதேவி முன்னிலையில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்…
நமது நிருபர்