வீட்டில் வேலை செய்தவரை தாக்கிவிட்டு | 33, சவரன் திருடியவர்கள் கைது |
திருட வந்த இடத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணை கடுமையாக தாக்கி திருடி சென்ற கொள்ளை கும்பல் கைது..
கோவை ஜிஎன்.மில் பகுதியில் உள்ள என்.பி.பீ நகரில் கார்த்திக் என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.
கணவன் மனைவி என இருவரும் தனியார் நிறுவனத்தில் பணி செய்வதால் வீட்டு வேலைக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த சத்யபாமா/65 என்ற பெண்ணை பணிக்கு வைத்துள்ளனர்.
கடந்த 3 ஆம் தேதி அன்று பணிக்கு இருவரும் சென்றுவிட அங்கு பட்டப்பகலில் திருட வந்த அடையாளம் தெரியாத மூவர் வீட்டு வேலையில் உள்ள சத்யபாமாவை கடுமையாக தாக்கிவிட்டு பீரோவில் இருந்த சுமார் 33 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றனர்.
இந்த புகார் அடிப்படையில் பாலமுரளி மற்றும் இளங்கோ ஆகிய இரு ஆய்வாளர்கள் குழு தனிப்படை அமைத்து சம்பவ இடத்தில் கிடைத்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தேடி வந்த நிலையில் நேற்று கோவை கனுவாய் என்ற இடத்தில் சங்கிலி பறிப்பு என்ற தகவல் வந்ததையடுத்து அங்கும் சிசிடிவி பதிவுகளை போலீசார் கைபற்றி இரு பதிவுகளின் குற்றவாளிகளின் முகத்தை ஒப்பிட்டு பார்த்ததில் இரண்டுமே ஒத்துபோக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்.
கைது செய்த குற்றவாளிகளான சென்னையை சேர்ந்த தங்கராஜ்/27, மதுரையை சேர்ந்த விக்கி(எ) விக்னேஷ்/25 என்பவர்களை விசாரித்ததில் தங்களது நண்பர் பாலமுருகன் என்பவருடன் சேர்ந்து பணத்திற்கும் சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இவ்வாறு திருடியதாகவும் ஒப்புக்கொண்டனர்.
குற்றவாளிகளிடம் இருந்து சுமார் 710- கிராம் எடையுள்ள ரூ.18 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்…
நிருபர் ராம்