நடுரோட்டில் ஒருவரை சரமாரியாக தாக்கி விட்டு | போலீஸ் என தப்பித்த போலிகள் |
சென்னை அரும்பாக்கத்தில் போலீஸ் என கூறி நடுரோட்டில் வாலிபர் ஒருவரை சரமாரியாக அடித்த போலி போலீஸ்.?
சென்னை வடபழனியில் தனியார் விடுதியில் தங்கி வரும் ஆவடியை சேர்ந்த விஜய்/27 இவர் இன்று காலை 11:30 மணியளவில் அரும்பாக்கம் காவல் நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள் விஜய் என்பவரை வழி மடக்கி நடுரோட்டில் சரமாரியாக அடித்து பனியனை கிழித்தனர். அருகில் இருந்த பொது மக்கள் மூன்று வாலிபர்களையும் தடுத்து நிறுத்தினர் அப்போது விஜய் என்பவரும் மது அருந்தி இருந்ததாகவும்.
குடிபோதையில் இருக்கும் வாலிபரை இப்படியா சரமாரியாக அடிப்பது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் நாங்கள் மூவரும் அமைந்தகரை போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீசாக பணி புரிகிறோம் என பொது மக்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அங்கு இருந்த அனைவரும் உங்களுடைய அடையாள அட்டையை காட்டுங்கள் நாங்கள் நம்புகிறோம் என்றதும் அந்த மூவரும் தப்பி ஓடிவிட்டனர் அப்போது எடுத்த வீடியோவை அங்கு உள்ள காவல்துறையினரிடம் காட்டினால் இவர்களை காவலர்களே இல்லை என்று தெரிவிக்கின்றனர்..
அடி வாங்கிய விஜய் என்பவரை அங்கு உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல்..
நமது நிருபர்