Sun. Oct 6th, 2024

தாய் – மகன் இருவரும் 26 -சவரன் நகைக்காக கொலை |

தாய் – மகன் இருவரும் 26 சவரன் நகைக்காக கொலை |

திருத்தணி ஒன்றியத்தில் கார்த்திகபுரம் அருகே பெருமாள் தாங்கள் புதூர். அடுத்த பாலாஜி நகரில் வசிப்பவர் வணபெருமாள்/45. இவர் அந்த பகுதியில் வசித்து வருகிறார் இவரது மனைவி பெயர் விஜி/40. இவரது மகன் போத்திராஜ் /10. இவர் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார் வனப் பெருமாள் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகில் உள்ள எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் தலைமை செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். இவர் நேற்று இரவு 11 மணியளவில் வேலைக்கு சென்றுள்ளார் அப்போது வீட்டில் அவரது மனைவி விஜி மற்றும் அவரது மகன் போத்திராஜ் ஆகியவர்கள் இருந்துள்ளனர்…

இன்று காலை 7- மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவியும் மகனும் இறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் விஜியின் கழுத்தில் இருந்து தாலி செயின் மற்றும் பணம் நகை வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டதும் தெரிய வந்தது மேலும் விஜியை கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர் அவரது மகன் போத்திராஜையும் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி விசாரணை மேற்கொண்டு கொலையாளியை பிடிக்க தனிப் படை அமைக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் நகை பணத்தை கொள்ளை அடித்துவிட்டு தாய் – மகன் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கொலை நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் ராம்போ மற்றும் கைரேகை நிபுணர்கள் மணிமாறன் குழு சம்பவம் நடந்த வீட்டில் விரிவான விசாரணை மேற்கொண்டனர். கைரேகைகள் எடுக்கப்பட்டது மோப்ப நாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் நெடுஞ்சாலை வழியாக திருத்தணி மாவட்ட எல்லையில் சரஸ்வதி நகர் என்ற இடத்தில் போய் நின்றுவிட்டது.

இதுகுறித்து போலீசார் கொலையாளி இந்த பகுதி வழியாக இருந்துதான் தப்பித்துச் சென்று இருப்பான் என்று அந்த பகுதியில் உள்ள காவல் துறையின் சிசிடிவி கேமரா மூலமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அதே பகுதியில் திருமண மண்டபம் உள்ளது திருமண மண்டபத்தின் வெளியே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய உள்ளனர் இதுகுறித்து திருத்தணி போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கொலைக்கு வடமாநில கொள்ளையர்கள் காரணமாக இருக்கலாமா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள் மேலும் இந்தக் கொலை – கொள்ளையில் ஈடுபட்டது ஒரு நபரா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

நமது நிருபர்