பெண் காவலர் வங்கியில் இருந்த பணம் அபேஸ்
சென்னை வில்லிவாக்கத்தில் பெண் போலீசின் வங்கி கணக்கில் ரூ.10, ஆயிரம் நூதன முறையில் திருட்டு.
சென்னை கானாத்தூரை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணவேனி
வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வருகிறார்.
நேற்று இவரது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது அதில் இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டது.
இதுகுறித்து அவரது கணவரிடம் கேட்டபோது வங்கியில் இருந்து அதிகாரி ஒருவர் பேசினார் அவர் கேட்ட தகவல்களை எல்லாம் கொடுத்தேன் என்று தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்து கிருஷ்ணவேனிக்கு அப்போது தான் தெரிந்தது வங்கி அதிகாரி போல் பேசி வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் கும்பல் என தெரியவந்தது இது குறித்து வில்லிவாக்கம் போலீசில் புகார் அளித்ததையடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் பல்வேறு பிரச்சாரங்கள் செய்து வரும் நிலையில் போலீசாரின் வங்கி கணக்கில் இருந்தே பணம் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
நமது நிருபர்