வழக்கறிஞரிடம் 9- சவரன் நகையை ஏமாற்றிய | ஆட்டோ டிரைவர் கைது |
அரும்பாக்கத்தில் வழக்கறிஞரை தள்ளி விட்டு 9 சவரன் நகை பறித்து சென்ற ஆட்டோ ஒட்டுனர் கைது.
அரும்பாக்கத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்/40 உயர்நீதி மன்றத்தில் வழகறிஞராக பணி புரிந்து வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தேவைக்காக தன்னிடமிருந்த 9-பவுன் நகையை அடகு வைக்க வேண்டும் என்பதால் அரும்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி அடகுக்கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
பாலசுப்பிரமணியன் நகையை அடகு வைக்க முடியாது என்று கடைக்காரர் கூறியதையடுத்து அந்த நகையை தான் அடகு வைத்து தருவதாக கூறி பாலசுப்பிரமணியன் இடமிருந்து 9 பவுன் நகையை வாங்கி கொண்டு கடைக்கு செல்வது போல் சென்று ஆட்டோவில் ஏறி அந்த நபர் தப்ப முயன்றார் இதை கண்டு ஆட்டோ ஓட்டுனரை பிடிக்க முயன்றபோது பாலசுப்பிரமணியனை தள்ளி விட்டு சென்று விட்டார் ஆட்டோவின் நம்பரை குறித்து கொண்டு அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் அவர் அமைந்தகரை ஆகாஷ் நகரை சேர்ந்த பக்கீர் மைதீன்/42 என்பவரை கைது செய்து விசாரித்த போது வக்கீலிடம் நகையை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பக்கீர் மைதீனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 9 சவரன் நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்…
நமது நிருபர்