Sun. Dec 22nd, 2024

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட | ஏழு பேர் கைது |

தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 7 பேர் கைது..

கோயம்பேடு நெற்குன்றம் பகுதிகளில் இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களை வழிமறித்து செல்போன் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு அடிக்கடி நடந்து வந்ததால் கோயம்பேடு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர் இந்த நிலையில் நேற்று இரவு கோயம்பேடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை மடக்கி விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்கள் அவர்கள் அனைவரையும் கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஆதாம், செல்வா, பாலாஜி, பிரவீன், ராஜேஷ், விக்னேஷ், மற்றும் 17வயது சிறுவன்
என 7 பேர் என்பதும் இவர்கள் கோயம்பேடு, வளசரவாக்கம், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பது மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி செல்வது உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து
8 செல் போன்கள்,
2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்பு அவர்களை சிறையில் அடைத்தனர்…

நமது நிருபர்