Fri. Dec 20th, 2024

மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான லட்சுமி யானை சிறப்பு பூஜைக்கு பின்பு புறப்பட்டு சென்றது.

தமிழக அரசு சார்பில் ஆண்டு தோரும் யானைகளுகாண புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோயில்கள், மடங்களுக்குச் சொந்தமான யானைகள் இந்த முகாமில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு புத்துணர்வு முகாம் நாளை 14-ம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் தமிழகம், புதுச்சேரி முழுவதிலுமிருந்து யானைகள் பங்கேற்க உள்ளன. இந்த முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சையுடன் கூடிய புத்துணர்வு சூழல் உருவாக்கப்படும். அத்துடன், யானைகளின் உடல் எடை பராமரிப்பு மூலிகை மருந்து உணவுகள் வழங்குதல் போன்றவையும் நாள்தோறும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்கப்படும். பவானி ஆற்றுப் படுகையில், இயற்கையான சூழலில் நடைபெறும் இந்த முகாமில் யானைகள் உற்சாகத்துடன் பங்கேற்க உள்ளன. முகாமில் பங்கேற்க புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான யானை லட்சுமி பங்கேற்க உள்ளது. இந்நிலையில் புத்துணர்வு முகாமில் பங்கேற்கபதற்காக யானை லட்சுமி புதுச்சேரியில் இருந்து புறப்பட்டுச் சென்றது. முன்பாக, யானை லட்சுமிக்கு கோவிலில் சிறப்பு கஜபூஜை நடத்தப்பட்டு பின்னர் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற லட்சுமியை வணங்கினர்…

Ak@ஆனந்தகுமார்