Sat. Dec 21st, 2024

டிரைவர் தூங்கியதால் தலைகுப்புற கவிழ்ந்த லாரி | அண்ணா வளைவு |

டிரைவர் தூங்கியதால் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது | அண்ணா வளைவு |

சென்னை அண்ணாநகர் வளைவு அருகே இன்று அதிகாலை கட்டுபாட்டை இழந்த லாரி ஒன்று தடுப்புச்சுவர் மற்றும் சிக்னல் போஸ்டில் வேகமாக மோதியதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது…

தஞ்சையை சேர்ந்தவர் முகில் வேந்தன்/23. சிமெண்ட ரெடிமிக்ஸ் லாரி டிரைவர் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் அரும்பாக்கம் அண்ணா வளைவு அருகே லாரியை ஓட்டி வந்த போது கண் அயர்ந்து தூங்கிவிட்டார்.கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியன் மத்திய தடுப்புச் சுவர் மற்றும் சிக்னல் போஸ்டில் வேகமாக மோதி தலைகுப்புற லாரி கவிழ்ந்து இதையடுத்து அண்ணா நகர் போக்குவரத்து உதவி கமிஷனர் ரவிசந்திரன் மற்றும் ஆய்வாளர் குமார் சம்பவ இடத்துக்கு வந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்டனர் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சீர் செய்தனர்..

நமது நிருபர்