சினிமா குத்துப் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பெண் காவலர்கள் |
குத்து பாடலுக்கு மேடை ஏறி நடனமாடிய பெண் காவலர்கள் |
சினிமா பாடல் ஒன்றிற்கு பெண் காவலர்கள் மேடையில் நடனம் ஆடிய நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் அனைத்து பெண் காவலர்கள் சபா ஒன்றின் ஏற்பாட்டின்படி, டெல்லி தென்மேற்கு மாவட்ட பெண் காவலர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சினிமா பாடல்களும் இடம்பெற அப்போது பிரபல சினிமா பாடலான ‘சப்னா சவுத்ரி’ என்ற பாடல் இசைக்க தொடங்கியதும் அங்கிருந்த சில பெண் காவலர்கள் உற்சாகத்தில் மேடை மீது ஏறி நடனமாடினர்.
அதை கீழே நின்று இருந்து பெண் காவலர் ஒருவர் வீடியோவாக படம் பிடித்தார். அவர்மட்டுமின்றி அங்கிருந்த பெண் காவலர்கள் நடனமாடிக்கொண்டு இருந்த போது அப்போது பெண் ஐபிஎஸ் அதிகாரி பெனிடா மேரி ஜெய்கர் தனது காலால் ஒரு நடன ஸ்டெப் போட்டார். அத்தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது…
நிருபர் ராம்