Sun. Oct 6th, 2024

மகளைக் காணவில்லை | நேற்றைய செய்திக்கு முழு விளக்கம் தந்த உதவி ஆய்வாளர் |

பேராண்மை.காம்

நேற்று வெளியிட்ட அமைந்தகரை காவல் நிலையத்தில் 8ம் வகுப்பு படிக்கும் தனது மகளை காணவில்லை என்றும் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஜாகீர் என்பவர் தனது மகளை கடத்தி இருக்கலாம்..? என்று அளித்த புகாரில் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைந்தகரை காவல் உதவி ஆய்வாளர் திரு.சிவசங்கரன் என்பவர் இந்த புகார் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என பத்திரிகையாளர்களிடம் மன உளைச்சல் காரணமாக தெரிவித்தார்..!

இந்த செய்தி வெளியானதும் நம்மை தொடர்பு கொண்ட அமைந்தகரை காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் முழு விவரங்களை நம்மிடம் தெரிவித்தார் அவரது விளக்கங்களை நிச்சயம் பதிவு செய்யப்பட்ட வேண்டியது பத்திரிகையாளரின் கடமை…

கடந்த மாதம் 15ம் தேதி அன்று அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கவியரசன் என்பவர் 8ம் வகுப்பு படிக்கும் தனது 13வயது மகளை, வடமாநிலத்தைச் சேர்ந்த ஜாகீர் என்பவர் கடத்தி இருக்கலாம் என புகார் அளித்தார் வழக்கை விசாரித்த உதவி ஆய்வாளர் சிவசங்கரன் பெங்களூரில் அவர்கள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உயர் அதிகாரிகளிடம் பெங்களூர் வரை மட்டுமே செல்ல அனுமதி வாங்கி முதல் நிலைக் காவலர் பாபுவுடன், பெண்ணின் தந்தை கவியரசன் மற்றும் அவரது மைத்துனருடன் பெங்களூர் சென்று தேடியதில் அவர்கள் வடமாநிலத்திற்கு சென்று விட்டதாக உறுதி படுத்தப்பட்டதும் மீண்டும் சென்னை வந்து உயரதிகாரிகளிடம் தகவலைக் கூறி வெளி மாநிலம் செல்ல அனுமதி கேட்டு உள்ளனர்..

தேர்தல் நேரம் என்பதால் பணிசுமை காரணமாக இன்னும் முறையான அனுமதி கிடைக்க சற்று காலதாமதம் ஏற்படுகிறது விரைவில் அனுமதியுடன் வெளிமாநிலம் சென்று மீட்டு வருவேன் என்கிறார் உதவி ஆய்வாளர் சிவசங்கரன்…

இதில் சம்பவத்தில் குறிப்பிட வேண்டிய விசயங்கள்:- வடமாநிலங்களில் பொதுவாக பெண்களுக்கு சிறுவயது திருமணம் செய்வதும் வழக்கம்…

விவரம் தெரியாத பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய அந்த இளைஞர் அழைத்து சென்றாரா அல்லது கடத்திச் சென்றார்களா என்று தீர தனிப்படை போலீசார் உதவியுடன் விசாரித்து வருகிறோம் விரைவில் அந்த பெண்ணின் தந்தை ஆட்டோ ஓட்டுனர் திரு.கவியரசன் அவர்களிடம் அவரது பெண்ணை நிச்சயம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கும் உள்ளது ஆகையால் சிலர் என்னைப் பற்றி தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள் என்ற விளக்கத்தையும் அவர் இந்த வழக்கு தொடர்பாக எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்று அதற்கான ஆதாரங்களையும் நம்மிடம் தெரிவித்தனர்…

பேராண்மை எப்போதும் காவல்துறைக்கு எதிரான குழுமம் இல்லை காவல்துறையில் நடக்கும் தவறுகளுக்கு மட்டுமே எதிரான இதழ் தான் பேராண்மை என்பதை நினைவுப்படுத்தி கொள்கிறோம்…

காவல்துறை அதிகாரிகள் விரைவில் அந்த பெண்ணை மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ( பேராண்மை இதழின் ) சார்பில் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்…