Sun. Dec 22nd, 2024

பெண்கள் உசார்..| கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடிக்கடி நடக்கும் நகை திருட்டு…!!??|

சென்னையில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 22 சவரன் நகையை கொள்ளை அடித்து மர்ம நபர்கள் ஓட்டம்.

சென்னை வியசர்பாடியைச் சேர்ந்தவர் சரவணன்/29. இவரது மனைவி தில்லிராணி/23. இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

புதுமண தம்பதிகளான இருவரும் ஆரணியில் உள்ள தில்லிராணியின் தாய் வீட்டிற்கு செல்வதற்காக 24ம் தேதி காலை 11 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தனர்.

பின்னர் ஆரணி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். பஸ் கிளம்பி நெற்குன்றம் அருகே வந்த போது தனது கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது அதில்
வைத்திருந்த 22 பவுன் நகை கொண்ட நகைப் பை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பஸ்சில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோயம்பேடு சிஎம்பிடி போலீசில் புகார் அளித்ததையடுத்து கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் அடிக்கடி நகை, பணத்திற்காக மர்ம நபர்கள் பயணிகளின் பைகளைத் திருடிச் செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கோயம்பேட்டிற்கு வரும் பயணிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது…

நமது நிருபர்