தொண்டர்களை பல மணிநேரம் காக்க வைத்தார் | சந்திக்காமல் திரும்பி போனார் வேட்பாளர் |
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் கிழக்கு, மேற்கு தவிர மீதி நான்கு சட்டசபை தொகுதிகளும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது இதில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியும் அடங்கும் இன்று (24/3/2019) காலை 9:30 மணிக்கு பெருந்துறை தோப்புபாளையம் பகுதியில் உள்ள பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்தின் அலுவலகத்திலேயே திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கான பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்புவிழா நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
திறப்புவிழாவிற்கு திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் ஆனந்தன், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரும் அழைக்கப்பட மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் பெருந்துறை அரசு மருத்துவமனை அருகே வேட்பாளரை வரவேற்க சுமார் மூவாயிரம் தொண்டர்கள் நின்றிருந்தனர் ஆனால் வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தன் அவர்களை சந்திக்க காத்திருக்கும் தொண்டர்களை சந்திக்காமல் வேறுவழியாக அலுவலக திறப்பு விழாவிற்கு சென்று விட்டார்.
இதையறிந்த தொண்டர்கள் தாங்கள் கூடியிருந்த இடத்திற்கும் அலுவலக இடத்திற்கும் சில நூறு மீட்டர்கள் தொலைவே இருந்ததால் அனைவரும் நேராக மேள தாளங்களுடன் எம்எல்ஏ அலுவலகம் நோக்கி படையெடுத்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் உச்சக்கட்ட டென்சனுக்கு ஆளான காவல்துறை புது அலுவலகத்திற்கு நூறு அடி முன்பாகவே அதிமுகவினரை தடுத்து நிறுத்த பகல் 1:00 மணி வரை மேளதாளங்கள் முழங்க அதே இடத்தில் இருந்த தொண்டர்கள் திறப்புவிழா முடிந்ததும் வேட்பாளர் ஆனந்தன் வந்த வழியிலேயே தொண்டர்கள் சந்திக்காமல் திரும்பி சென்றுவிட இதனால் அதிகபட்ச டென்சனுக்கு ஆளான தொண்டர்கள் இனி வீடு தேடி நேரடியாக வந்தாலும் ஆனந்தனுக்கு வாக்களிக்க கூடாது என கூறிக் கொண்டே அங்கிருந்து கலைந்து சென்றனர்…
பேராண்மை