Fri. Dec 20th, 2024

திருத்தணி பிரசாத கடை ஊழியர் சமோசா விற்ற பெண்ணை தாக்கியதில் பரபரப்பு..!!!

திருத்தணி முருகன் கோயில் மலை மேல் உள்ள ஒரு பிரசாத கடையின் ஊழியர், கடையின் வெளியே சமோசா விற்ற பெண்ணை தாறுமாறாக தாக்கி உதைத்தார். இதை தட்டிக் கேட்ட பக்தர்களுக்கு பிரசாத கடை ஊழியர் தகாத வார்த்தையில் பேசியதால், ஆத்திரமடைந்த சென்னையை சேர்ந்த பெண் திருத்தணி காவல் நிலையத்தில் புகார்…

திருத்தணி -மார்ச் -20. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகர் கோயில் மலையின் மேல் திருக்கோயில் நிர்வாகத்தால் பிரசாத கடை ஏலம் விடப்பட்டு பிரசாத கடை நடத்தி வருகிறார்கள். அங்கு ஒரு பிரசாத கடையின் வெளியே ஒரு பெண் சமோசா விற்று வந்தார். அவரை பிரசாத கடை ஊழியர் இங்கு சம்சா வைக்காதே போ என்று ஒருமையில் பேசியும், தகாத வார்த்தையில் திட்டியும் அவரை தாறுமாறாக அடித்து உதைத்தார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏன் அந்த பெண்ணை தாக்குகிறீர்கள், ஏன் அடிக்கிறீர்கள் என்று பிரசாத கடை ஊழியரை தட்டிக் கேட்டனர். பக்தர்களும் பெண்களும் அப்போது பிரசாத கடை ஊழியர் பக்தர்களையும் பெண்களையும் தகாத வார்த்தைகள் பேசி தலையிடக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் பிரசாத கடையை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பயங்கர சண்டையிட்டனர். மலை மீது போலீஸ் இருந்தும் இதனை தட்டி கேட்கவில்லை என்று போலீஸ் மீதும் பக்தர்கள் புகார் கூறினர். ஆனால் முருகன் கோயில் நிர்வாகமும் இதில் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை என்று பக்தர்கள் வருத்தப்பட்டனர். பக்தர்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகம் மீதும் பக்தர்கள் புகார் கூறினர்.

ஒரு பெண்ணை அடித்து உதைத்த அந்த பிரசாத கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பிரசாத கடையை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தும் காவல்துறை பிரசாத கடைக்கு ஆதரவாக செயல்பட்டதால் பக்தர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

மேலும் இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும், பிரசாத கடை ஊழியர் அந்த பெண்ணை தாக்கியது தவறு என தட்டிக் கேட்க வந்தவர்களை பக்தர்கள் என்று பாராமல் எங்களையும் தாறுமாறாக பேசி மிரட்டியதற்கு கோயில் பிரசாத கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்தணி காவல் நிலைத்தில் சென்னையை சேர்ந்த பக்தர் மைதிலி என்பவர் புகார் தெரிவித்துள்ளார்…