நடிகை ஸ்ரீரெட்டி வீட்டில் புகுந்து தயாரிப்பாளர் கொலை மிரட்டலா.?| ஸ்ரீரெட்டி நாடகமா.? |
பிரபல தெலுங்கு நடிகையை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சினிமா தயாரிப்பாளர் மற்றும் அவரது அக்கா மகன் இருவர் கைது. கோயம்பேடு போலீசார் விசாரணை.
சென்னை வளசரவாக்கம் அன்பு நகரை சேர்ந்த பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி (30) மற்றும் அவருடைய மேனேஜர் மோகன் என்பவரை நேற்று இரவு வீடு புகுந்து இருவர் தாக்கி உள்ளனர்.
இது குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி நேற்று இரவு கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
வழக்குப் பதிவு செய்த கோயம்பேடு போலீசார் நடிகையை தாக்கிய இருவரை கைது செய்து விசாரணை செய்ததில், சென்னை வளசரவாக்கம் நடேஷன் தெருவை சேர்ந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் சுப்பிரமணி (40) மற்றும் இவருடைய அக்கா மகன் கோபி (23) இருவரும் நேற்று நடிகை ஸ்ரீரெட்டி வீட்டில் புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே தயாரிப்பாளர் சுப்பிரமணி ஹைதராபாத்தில் 3 மாதத்திற்கு முன்பு நடிகை ஸ்ரீ ரெட்டியை பாலியல் தொல்லை கொடுத்ததற்காக நடிகை ஸ்ரீரெட்டி புகாரின் அடிப்படையில் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரது அக்கா மகன் கோபியுடன் சேர்ந்து நேற்று இரவு நடிகை ஸ்ரீரெட்டி வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் மாதேஸ்வரன் நடிகை ஸ்ரீரெட்டியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….