Sat. Dec 21st, 2024

தொழில் அதிபரை மிரட்டி பெண்ணுடன் அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த கும்பல் கைது

வாணியம்பாடியில் தொழில் அதிபரிடம் ரூ.3 லட்சத்து 4 ஆயிரம் பறித்த 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது. 6.5 சவரன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.போலீசார் நடவடிக்கை.

வாணியம்பாடி (மார்ச் 20 – 2019) : வேலூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம் நகர், நூருல்லாபேட்டை பகுதில் வசித்து வருபவர் அப்துல் ரப் ஆரிஃப். கடந்த ஒரு வருடமாக இவரது தாயார் உடல் நலக்குறைவால் படுக்கையில் இருந்து வருவருகிறார். அவரை கவனிக்க செவிலியர் வேண்டும் என்று பலரிடம் கூறி வந்ததுள்ளார். இதன் அடிப்படையில் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆபிதா என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழிலதிபரை செல் போனில் தொடர்பு கொண்டு செவிலியர் ஒருவர் இருப்பதாகவும், நேரில் வந்து அழைத்து செல்லுமாறு பேசி உள்ளார்.

இந்நிலையில் அவர் கடந்த சனிக்கிழமை பெங்களூரிலிருந்து ரயிலில் ஆம்பூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த பெண் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு செவிலியரை அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். இதனை கேட்டு அவர் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு ஆட்டோ மூலம் அந்த பெண் வீடிற்கு சென்றுயுள்ளார். அப்போது அந்த பெண் அவரை வீட்டிற்குள் அழைத்து சென்று ஒரு அறையில் அமர வைத்துள்ளார். பின் திடீர்ரென 8 பேர் கொண்ட கும்பல் அறையில் நுழைந்து கத்தி மற்றும் ஆயுதங்களை காண்பித்து அவருடைய ஆடையை கழற்றி அரை நிர்வாணமாக்கி பக்கத்தில் ஒரு பெண்ணை நிறுத்தி செல் போனில் படம் பிடித்து, அப்படத்தைக் காண்பித்து பணம் கேட்டு மிரட்டியும், பணம் கொடுக்காவிட்டால் சமுக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர். அப்போது அவர் உயிர்க்கு பயந்து தன்னிடம் இருந்த ரூ. 4 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் அவர் வைத்திருந்த 5 வங்கிகளின் ஏ.டி.எம் கார்டுகளை பறித்து அதன் ரகசிய என்னை மிரட்டி வங்கிய பின்னர் அவரை அறையில் பூட்டி சென்றனர்.

இதனை தொடர்ந்து ஏ.டி.எம் கார்டுகளை எடுத்து சென்ற அந்த கும்பல் வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள ஒரு நகை கடையில் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி ரூ.2 லட்சத்துக்கான நகைகளை வங்கியுள்ளனர். மேலும் பல்வேறு வங்கி ATM மை பயன்படுத்தி ரூ 1 லட்சத்தை எடுத்துள்ளனர். பின் அறையில் பூட்டி இருந்த தொழில் அதிபரை இரவு 10 மணிக்கு கும்பலின் ஒருவர் ஆட்டோ மூலம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்த்துள்ளார். அப்போது காதர்பேட்டை என்ற இடத்தில் ஆட்டோ வந்த போது தொழிலதிபர் கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்ட பகுதி மக்கள் ஆட்டோவை நிறுத்தினர் அப்போது அதில் இருந்த நபர் ஓட முயன்ற போது பொதுமக்கள் அவரை பிடித்தனர். விசாரித்த போது தொழில் அதிபர் தன்னை கடத்தி பணம் பறித்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பிடிப்பட்ட நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான போலீசார் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த இரண்டு பெண்கள் உட்பட 10 பேர்களை 1) அபிதா, 2) தாரா, 3) ஷாபுதின், 4) நதீம் 5) கோவிந்தராஜ், 6) மனோஜ், 7) அசேன், 8) சதாம்உசேன், 9) இப்ராஹிம் 10) அஸ்லம் ஆகியோரை போலீசார் தீவிர தேடுதலுக்கு பின்னர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6.5 சவரன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். கைது செயப்பட்டவர்களை வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நெடுவர் காளிமுத்துவேல் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்…

நன்றி – தென்றல் தமிழரசன்