Sat. Dec 21st, 2024

அண்ணா நகரில் தொடர்ந்து நள்ளிரவில் கொள்ளை | வழிமறித்து துணிகரம் |

தொடர்ந்து நள்ளிரவில் கொள்ளை அண்ணா நகரில் | வழிமறித்து துணிகரம் |

சென்னை அண்ணா நகரில் மீண்டும் தொடர்கிறது நள்ளிரவில் கொள்ளை நேற்று முன்தினம் கார் ஓட்டுனரை கத்தியை காட்டி மிரட்டி 6 ஆயிரம் பணம் பறித்து சென்ற கொள்ளையர்களை அண்ணா நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அண்ணா நகர் மடவங்கரை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர் பிரபு வயது 25. இவர் வேலையை முடித்து விட்டு அண்ணா நகர் ஏ.எச் பிளாக் வழியாக நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில் நடந்து வரும் போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் 3 மர்ம நபர்கள் ஓட்டுனர் பிரபுவை வழி மடக்கி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாக்கெட்டில் இருந்த 6 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர் இது குறித்து ஓட்டுனர் பிரபு அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வழக்கு பதிவு செய்து அண்ணா நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதே போல் ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா நகர் பகுதியில் 100 சவரன் நகை மற்றும் 6 லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையர்களையும் பிடிக்க முடியாமல் அண்ணா நகர் போலீசார் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…