நடிகர் விஜய் படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடியடி |
வடசென்னையில் விஜய் ரசிகை ரசிகர்களுக்கு தடியடி இதனால் பெரும்பரபரப்பு
வடசென்னையில் N4 கடற்கரையில் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்களின் 63 வது படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இதில் விஜய் அவர்களை பார்ப்பதற்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். கூட்டம் அதிகரித்ததால் போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதில் ரசிகர்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.!
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரசிகர்கள் நாங்கள் விஜய் அவர்களை பார்ப்பதற்கு மாலை நான்கு மணியளவில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் போலீசார் எங்களை விஜய் அவர்களை பார்க்க விடாமல் அடித்து தொரத்துகின்றனர். என குற்றம் சாட்டினார்கள்….