Sat. Dec 21st, 2024

தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளை கும்பல் | நால்வர் கைது |

பிரபல கொள்ளை கும்பல் | நால்வர் கைது |

பூட்டிய வீடுகளில் நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் கும்பல் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர்…

திருப்பூர் தெற்கு, திருமுருகன் பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில்…

கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியபோது.வழக்கம் போல் சிசிடிவி பதிவுகள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்ட போது முன்னாள் குற்றவாளிகளை எல்லாம் விசாரித்து வந்த நிலையில் சிசிடிவி பதிவுகளில் ஒரு கார் செல்லும் காட்சியை வைத்து காரின் உரிமையாளர் யார் என்று தொடர்பு கொண்டு அவரிடம் பெறப்பட்ட விவரங்களை வைத்து திருப்பூர் காங்கேயத்தை சேர்ந்த யாசீர் என்பவரை கைது செய்து விசாரித்ததில் காங்கேயத்தை சேர்ந்த முகமது ரஃபிக், கடலூரை சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் வண்டி பாளையத்தை சேர்ந்த முருகன் ஆகிய தனது மூன்று கூட்டாளிகளும் இந்த கொள்ளையில் உடந்தையாக இருந்ததை ஒப்புக் கொண்டார்…

இரவு நேரங்களில் யாரும் இல்லாத வீடுகளில் புகுந்து தனது மூன்று கூட்டாளிகளுடன் கொள்ளை அடிப்பது தான் எங்களது வழக்கம் என ஒப்புக்கொண்டனர்.

பின்னர் தலைமறைவாக இருந்த யாசீரின் மூன்று கூட்டாளிகளையும் கண்டறிந்து அவர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கார் உட்பட 35-சவரன் தங்க நகைகளும் மொத்தம் சுமார் 12-லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிவித்தனர்…

நிருபர் வெ.ராம்