Sat. Dec 21st, 2024

அமைச்சரின் ஆதரவாளர் பெட்ரோல் பங்க் என்றாலே,?| தில்லு முல்லு தான் |

அமைச்சரின் ஆதரவாளர் பெட்ரோல் பங்க் என்றாலே,?? | தில்லு முல்லு தான் |

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகப்பா ஏஜென்சியின் பெட்ரோல் பங்க் ஒன்று அண்ணா சிலை அருகே உள்ள திருமயம் சாலையில் இயங்கி வருகிறது…

இங்கு பெட்ரோல் போடுவதற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இங்கு உள்ள பெட்ரோல் அளவைக் குறிக்கும் மீட்டரில் காட்டுவதை விட குறைவாக வருகிறது எனவும் இங்கு பெட்ரோலில் மோசடி நடப்பதாக கூறிவருகின்றனர் இதை உண்மை என்று தற்போது அம்பலமானது…

நேற்றுமுன்தினம் அப்பகுதியில் உள்ள சுதர்சன் என்ற இளைஞர் ஒருவர் வாடிக்கையாளர் பெட்ரோல் போடுவதற்காக தனது இரு சக்கர வாகனமான பல்சர் 180,CC இதன் பெட்ரோல் டேங்கின் அளவு 15 லிட்டர் வரை தான் ஆனால் அங்கு பணிபுரியும் நபர் 18 லிட்டருக்கான ரசீது ரூபாய் 1400-க்கு வழங்கியதும்…அதிர்ச்சியில் அந்த இளைஞர் சத்தம் போட்டு ஏன் இந்த ஏமாற்று வேலை என கேட்க ஆத்திரமடைந்த ஊழியர்கள் தங்களின் மோசடி வெளியான கோவத்தில் அது அப்படி தான் எங்க வேணா சென்று புகார் செய் என மிரட்டியுள்ளனர் அவர்களே காவல்துறைக்கு போன் செய்து அழைத்ததும் அங்கு வந்த காவல்துறையினர் விசாரிப்பது போல பாவனை செய்ய இதனை பார்த்த அங்கு வந்த அனைத்து வாடிக்கையாளர்கள் சுதர்சனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க
ஆதாரங்கள் அனைத்தையும் பார்த்த பிறகும் புகாரை பெறாமல் பெட்ரோல் பங்கிற்கு ஆதரவாக சுதர்சனையும் அங்கு கூடிய இதர வாடிக்கையாளர்களையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த மோசடிக்கு துணையாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இருந்தாலும் அமைச்சரின் ஆதரவாளர் என்றால் அதற்காக பொதுமக்கள் 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் போடுவதிலுமா தில்லு முல்லு செய்ய வேண்டும்..?

நமது நிருபர்