பாலியல் துன்புறுத்தல் செய்த கார் ஓட்டுநர் சென்னையில் கைது |
பாலியல் துன்புறுத்தல் செய்த கார் ஓட்டுநர் கைது |
காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் கார் ஓட்டுநர் ஒருவர் சென்னையில் கைது.
நாகை மாவட்டம் வண்டிபேட்டையைச் சேர்ந்தவர் சுந்தர் சென்னையில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் இவர் நாகையைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் துண்புறுத்தல் செய்துள்ளார் மேலும் அந்த பெண்ணிடம் நெருக்கமாக உள்ள படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியும் பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் நாகை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே சென்னை விரைந்த தனிப்படை போலீசார் சுந்தரை அதிரடியாக கைது செய்தனர்.
போலீசார் சுந்தரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அதில் ஏராளமான பெண்களுடன் சுந்தர் நெருக்கமாக இருப்பது தெரியவந்தது இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நிருபர் வெ.ராம்