கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய | விபச்சார கும்பல் கைது |
சென்னையில் விபச்சார கும்பல் கைது |
நவீன விபச்சார கும்பல் 3 பேர் கைது ஒரு கார், 3 பெரிய பட்டகத்தி, ஆகியவை பறிமுதல் முக்கிய குற்றவாளி விபச்சார கும்பலின் தலைவன் தலைமறைவு.
கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி மாலை சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி 4வது தெருவில் உள்ள தனியார் மசாஜ் சென்டரில் புகுந்த கும்பல் மேலாளர் அருண்குமார் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 36-ஆயிரம் பணத்தையும், ஊழியர் சசிகலா கழுத்தில் கத்தியை வைத்து 4- சவரன் நகையையும் பறித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மேனேஜர் அருண்குமார் அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று அதிகாலையில் திருநெல்வேலி நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணிக்கராஜ்/23, வேலைய்யா/ 25, செல்வா/25 ஆகியோரை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
சென்னையில் பல இடங்களில் வெளி மாநிலத்தில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுப்படுத்தியதும், அனுமதியின்றி நடைப்பெறும் மசாஜ் சென்டர் இடங்களில் மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துருப்பதும் தெரியவந்தது.
இதில் முக்கிய குற்றவாளியான விபச்சார கும்பல் தலைவன் கொம்பன் பாண்டியன் தலைமறைவாக உள்ளதாகவும் அவரை பிடித்தால் சென்னையில் நடைப்பெறும் நவீன விபச்சாரத்தில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள்
எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்…
நமது நிருபர்