Mon. Oct 7th, 2024

தேர்தல் பறக்கும் படை அதிகாரி வேஷத்தில் | ரூபாய் 1.07 கோடி அபேஸ் |

சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என்று கூறி ரூ-1.07 கோடி கொள்ளை…

சென்னை சைதாப்பேட்டை அருகே நடந்த சம்பவம். காஞ்சிபுரம் தண்டலத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிபவர் உதயகுமார் இவர் வேப்பேரியில் தொழில் கடனாக ரூ1.07-கோடி பெற்றுக் கொண்டு அடையார் சாஸ்திரி நகரில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் இல்லத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

காருக்குள் மேலாளர் உதயகுமார், கணக்காளர் இளங்கோ, வேணுகோபால், ஆகியோர் உடன் பயணம் செய்து கொண்டு இருந்தனர் அப்பொழுது சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் கார் செல்லும்போது திடீரென மற்றொரு கார் ஒன்று அந்த காரை வழி மறித்து நின்று, அந்த காரில் இருந்து வெளியே வந்த மர்ம நபர்கள் சிலர், தாங்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என்றும், காரை சோதனையிட வேண்டும் என்றும் கூறி சோதனை நடத்திய பொழுது பணம் இருந்தது தெரிந்தது.

உடனே அவர்கள் உதயகுமார் வந்த காரிலேயே கடத்தி சென்று பூந்தமல்லி அருகே அடித்து உதைத்து ரூ,1.07- கோடியை கொள்ளையடித்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அதிர்ச்சியடைந்த உதயகுமாரும் மற்றவர்களும் இது பற்றி உரிமையாளர்களிடம் தெரிவித்தனர் மேலும் இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில் உண்மை தன்மை உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்…

நமது நிருபர்