Sat. Dec 21st, 2024

கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது |

கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது |

மதுரை ராஜன் மருத்துவமனை பின்புறம் உள்ள சிட்டாலாட்சி நகரில் ஆட்டோ ஓட்டுனராக பணி புரிந்து வசித்து வரும் மணிகண்டன்/42 என்பவர் நேற்று மதுரை டவுன் பைபாஸ் ரோடு அருகே நின்று கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத இருவர் மணிகண்டன் அருகே வந்து செலவுக்கு பணம் தரும்படி கேட்டுள்ளனர்.

எதற்கு உங்களுக்கு பணம் தர வேண்டும் கேள்வி கேட்டு பணம் தர மறுத்த மணிகண்டனை இருவரும் அவதூறாக திட்டியும் பிறகு தங்கள் முதுகில் மறைத்து வைத்திருந்த பெரிய பட்டா கத்திகளை மணிகண்டனின் கழுத்திலும் வயிற்றிலும் வைத்து மிரட்டியுள்ளனர்.

உயிர் பயத்தில் இருந்த மணிகண்டன் செய்வதறியாமல் திகைத்து நிற்க மிரட்டிகொண்டு இருந்த இருவரும் அவரின் சட்டை மேல் பையிலிருந்து 400 ரூபாயை பிடிங்கிகொண்டு தப்ப முயற்சித்த போது மணிகண்டன் சத்தம் போட்டு அலற மக்கள் திருடர்களை பிடிப்பதற்கு உடனே ஓடி வந்த நிலையில் தங்களிடம் இருந்த பட்டா கத்தியை காண்பித்து சுழற்றி பயமுறுத்தி பொது மக்களிடம் இருந்து தப்பி சென்றனர்.

இதை தொடர்ந்து மணிகண்டன் மதுரை சி3 எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் போலீசார் குற்றவாளிகளை உடனே கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர் வழிபறியில் தொடர்புடைய
காளிமுத்து ஐ நகர்பொன்மேனி மெயின் ரோடை சேர்ந்த கார்த்தி/23 மற்றும் பழங்காநத்தம் நீதிகரை சேர்ந்த ரகுராமன்/23 என்பவர்கள் எனவும் குற்றவாளிகளிடமும் இருந்த 4-பெரிய பட்டா கத்திகளும் 2- செல் போன்களும் மற்றும் பணம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைப்பற்றி அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்…

நிருபர் வெ.ராம்