Fri. Dec 20th, 2024

காவல் உதவி ஆய்வாளர்களுக்கு தேவையான பயிற்சி |

காவல் உதவி ஆய்வாளர்களுக்கு தேவையான பயிற்சி |

சேலம் மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணி செய்யும் உதவி ஆய்வாளர்களுக்கு மென் திறன் பயிற்சி 11ம் தேதி காலை மாலை என இரண்டு வேளையும் சென்னை அண்ணா மேலாண்மைக்கழக பயிற்சியாளர் திரு.ஞானசேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது…

இப்பயிற்சியில் சேலம் மாநகரில் பணியாற்றும் சுமார் 40 உதவி ஆய்வாளர்கள் பங்கு கொண்டனர்.

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சேலம் மாநகர காவல் ஆணையர் திரு.சங்கர் அவர்கள் மாநகர காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் மூன்று மடங்கு அதிகளவில் புகார் மனுக்கள் பெறப்படுவதாக தெரிவித்தார்.

விசாரணை அதிகாரிகள் புகார் அளிப்பவர்களிடம் தேவையில்லாத அறிவுரைகளையும் புகார் அளிக்க வருபவர்களை தாமதமின்றி அனுகி அதிகாரிகள் செயல்படுவது பற்றியும் தேர்தலை முன்னிட்டும் வேறு மாவட்டங்களில் இருந்து சேலம் மாநகரத்திற்கு பணி மாறுதலில் வந்துள்ளவர்கள் சேலம் மாநகர காவல் நிலையங்களில் செயல்படுத்த வேண்டும் இத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் பொதுமக்களை கனிவாக அணுகுமாறு கேட்டுகொண்டார்…

நிருபர் வெ.ராம்