Sat. Dec 21st, 2024

லஞ்சம் மட்டுமே என் லட்சியம்.?| கட்டிட ஆய்வாளர் ஜெயந்தி |

லஞ்சம் மட்டுமே என் லட்சியம்..?? | கட்டிட ஆய்வாளர் ஜெயந்தி |

பல்லவபுரம் நகராட்சியில் நகரமைப்பு பிரிவில் ஆய்வாளராக பணி புரிந்தவர் தான் இந்த வி.ஜெயந்தி அம்மையார் லஞ்சம் வாங்குவதில் கில்லாடி என பெயர் வாங்கியவர் ஒரு சாதாரண அரசு ஊழியரான ஜெயந்தி சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆவடியில் உள்ள இவரது வீட்டில் மட்டும் சோதனை செய்த போது மாஜி அமைச்சர் ஒருவரின் பெயரில் உள்ள பல கோடி மதிப்புள்ள உள்ள பத்திரங்கள் மற்றும் தாம்பரம் வித்யா தியேட்டர் அருகே உள்ள பெண்கள் விடுதி வைத்து நடத்தும் கட்டிடத்தின் பத்திரங்கள் உட்பட மொத்தம் 15-கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றிய தகவலை நகராட்சிகளில் உள்ள கட்டிட ஆய்வாளர்கள் பேசிக் கொள்கின்றனர்.

மேலும் பல்லாவரம் நகராட்சியில் ஜெயந்தியின் மேஜையில் (TABLE) இருந்து எடுத்த ரூபாய் ஒரு லட்சம் எனவும் அந்த பணம் கட்டிட அலுவலர் சிவகுமார் என்பவருக்கு கொடுக்க வைத்துள்ளது எனவும், அதை தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைபற்றியுள்ளனர் என்றும், தன்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆட்ட முடியாது என்றும் சவால் விடும் ஜெயந்தியின் அரசு சம்பளம் அவருக்கு இரண்டாம் பட்சம் தான் என்கிறனர் அவருடன் பணியாற்றிய ஊழியர்கள்…

ஜெயந்தியின் மறுபக்கம் குறித்த மேலும் சில தகவல்கள்.???

கடலூர் நகராராட்சியில் கட்டிட ஆய்வாளராக இருந்த போது லஞ்ச புகாரில் சிக்கிய ஜெயந்தி தப்பிக்க அங்கு இருந்த அப்பாவியான சிவகுமார் என்ற ஒருவரையும் சிக்க வைத்துவிட்டு ஓடியவர் என தகவல் பின்னர் வேலூர் நகராட்சியில் பணியாற்றிய போது அந்த நகராட்சி கமிஷ்னர் குபேந்திரன் இவரது கையை பிடிச்சி இழுத்தார் என போலீசில் புகாரும் கொடுத்தாராம் இப்படி பல தில்லாலங்கடி வேலைகள் செய்ததை பற்றி் உயரதிகாரிகள் கண்டித்தால் அவர்கள் மீது பொய் புகார் செய்தும் மிரட்டுவதும் இவரது வழக்கம் இவரை பற்றி செய்தி வெளியிட்டால் கூட அந்த பத்திரிகையாளர் மீது பொய் வழக்கு பதிவு செய்வதும் வழக்கம்…

கட்டிட ஆய்வாளர் ஜெயந்திக்கு தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் சிஎம்டிஏவுக்கு கொடுத்த நெருக்கடியால் தற்காலிகமாக காஞ்சிபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..

காஞ்சிபுரத்திலும் (கட்டிட ஆய்வாளர்) லஞ்சம் கேட்டால் உடனே ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையின் இந்த. 044 27237139. நம்பருக்கு போன் செய்யுங்கள் அடுத்த முறை இவர்களுக்கு இடமாற்றம் இல்லையாம் நேரா சிறைதான் என்கிறார்கள் ஒரே குரலில் கூறும் நகராட்சி ஊழியர்கள் அனைவரும்…